Monday, 24 February 2025

கண்மணி அன்போடு....

 கண்மணி அன்போடு....

தலைப்பப் படிச்சதும் ஒரிஜினல் குணா பட சாங் உங்கள் காதில் ஒலித்தால் நீங்களும் என் தலைமுறை. மஞ்ஞும்மல் போய்ஸ் (மலையாளிகள் அங்கனெயாக்கும் பரயும்) படம் நினைவுக்கு வந்தா நீங்க பழசயெல்லாம் மறக்குற பாவின்னு அர்த்தம். க்கும்...புதிய தலைமுறை எதுக்கு இந்த ப்ளாக் எல்லாம் படிக்கப் போறாங்க? (இப்படிச் சொல்லி ஒரு மார்க்கெட்டிங்தான்...ப்ளீஸ் உங்க பசங்களையும் படிக்கச் சொல்லுங்க).  நமக்கு எப்பவும் இருமொழிக் கொள்கைதாங்க. ஐ மீன் எழுதறதுல. டமில் ஆங்கிலம்ன்னு நான் மிக்ஸ் பண்ணி எழுதுவேன். தூய தமிழ் வேணும்ன்னாலும் எழுதுவேன்...தேவை இருந்தா மூன்றாவது மொழியிலயும் எழுதுவேன். இப்பப் பாருங்க...നിങ്ങൾ മഞ്ഞുമ്മൽ ബോയ്സ് ചലച്ചിത്രം കണ്ടിട്ടുണ്ടോ? - நிங்கள் மஞ்ஞும்மல் போய்ஸ் சலச்சித்ரம் கண்டிட்டுண்டோ? ஆனா பானி பூரி எனக்குப் பிடிக்காது...அது உடம்புக்கும் கெடுதல். நீங்களா எதாவது கோத்துவிட்றாதீங்க அப்றம் என் வீட்டை முற்றுகை இட்ருவாங்க. முஜே ஹிந்தி அச்சே ஸே மாலூம் ஹை. நான் ஸ்கூல் படிக்கும்போது 30 நாட்கள் ஹிந்தி புக் வாங்கிக் கத்துக்கிட்டேன். ஆனா ஸ்கூல்ல கத்துக்கல. சரி..சரி...ப்ளாக் எழுதுனமா, திரும்பத்திரும்பப் படிச்சுப்பாத்து சந்தோஷப்பட்டமான்னு இருக்கணும். இப்படி போற போக்குல அரசியல் கருத்துகளையெல்லாம் அள்ளித் தெளிக்கப்படாது - இது எனக்கு நானே திட்டம்....ச்சய் மறுபடியும் அரசியல்.

அதெல்லாம் நமக்கு வேணாம். வந்த வேலையப் பாப்போம். உங்களுக்கு லவ் லெட்டர் எழுதின அனுபவம் இருக்கா? சும்மா சொல்லுங்க வீட்ல சொல்லமாட்டேன். ஒரு நிமிஷம்....நேத்து எழுத வராததுக்கு ஒரு காரணம் இருக்கு. சரவணா....டைம் மெஷின ராமசாமி சைக்கிள் கடைல கொடுத்து ஓவராயில் (அது overhauling ன்னு தெரியும். ஆனா நாங்க அப்படித்தான் சொல்லுவோம்) பண்ணிட்டேன்.  சரவணன் யாருன்னு தெரியலன்னா நீங்க இன்னும் கமென்ட் படிக்கல...போயி படிச்சுட்டு நீங்களும் கமென்ட்டுங்க. இப்ப போலாம் ரைட்...எனக்கெல்லாம் லவ் லெட்டர் எழுதுன அனுபவம் இல்ல (எங்காத்துலயும் இதப் படிப்பாங்களோன்னோ?).... இவங்க எழுதறத அங்கயும் அவங்க தந்தத இவங்களுக்கும் கொடுத்து போஸ்ட்மேன் வேல பாத்த அனுபவந்தான் இருக்கு. என்ன எல்லாரும் ரொம்ப நம்புவாங்க (ச்சின்ன்ன்ன வயசுல). அதனால எழுதுன லவ் லெட்டர நாலா மடிச்சு லேசா எச்ச தொட்டு ஒட்டித் தருவாங்க. அத சரியான நேரத்துல உரியவங்ககிட்ட சேர்க்கறதுக்குள்ள நமக்கு நாக்கு வறண்டு வெலவெலத்துப் போகும். அப்ப நான் ஒல்லியா சின்னப் பையனா இருப்பேன் (இது அது இல்ல...சீமான் அண்ணன்கிட்ட இருந்து காப்பி ரைட்ஸ் வாங்கிட்டேன்). அதனால ‘அக்கா அங்க மரத்துக்கடியில ஒரு பொருள் வச்சிருக்கேன்...அந்த அண்ணன் கொடுத்தாங்க’ன்னு சொல்லிட்டு ஓடிருவேன். இந்த கூரியர் சர்வீஸப் பாராட்டி இரண்டு பக்கத்திலிருந்தும் தலா ஒரு ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். இப்ப  ட்டக்குன்னு ஒண்ணு தோணுது. அதையும் சொல்லிர்றேன். கண்மணி அன்போடு காதலன்னு நாம இப்பவும் முனுமுனுக்குற குணா படம் வந்த அதே ஆண்டுல (1991) வந்த ஒரு லவ் லெட்டர் சாங் இருக்குற படம் என்ன படம்? சொல்லுங்க பாக்கலாம்....எஸ்...யூ ஆர் ரைட்.. ரேசன்  சேரன் பாண்டியன். அப்பறம் அந்தப் பாட்டு....ஆஹா..அதேதான் ப்ரமாதம்...மெமரி, மெமரி...நல்ல மெமரி. ’காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு’...என்னா பிக்சரைசேஷன்?  ....சிரிச்சுகிட்டே என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீஜாவ.....மறக்க முடியுமா? அப்பத்த இளைஞர்களின் க்ரஷ். இருக்காதா பின்ன? அவங்க கேரள இறக்குமதியாச்சே.  அவங்க அழக வர்ணிக்குற அளவுக்கு அப்ப எனக்கு வயசு இல்ல; எட்டாவது-ஒன்பதாவதுதான் படிப்பேன். ஆனந்த பாபுவும் அதில் நடித்திருக்கிறார் என்பது ஒரு கொசுறு தகவல். இந்தப் பீடிகையெல்லாம் போட்டாத்தான் நீங்க மனசத் திறந்து உங்க லவ் லெட்டர் கதையச் சொல்லி மாட்டிக்குவீங்க.

பி.கு: பிகு பண்ணாம ரெண்டு நாள் டைம் மெஷின்லயே இருங்க....பசிக்குதா? அப்ப ஸ்விக்கி எல்லாம் இல்ல....இதுக்குத்தான் மொதல்லயே பாக்கு மட்டைல புளிச்சோத்தக் கட்டி எடுத்துட்டு வர சொன்னேன். 

இந்த நேருக்கு ஒரு ட்விஸ்ட்ட வப்போம். இன்னைக்கு ஒரு புதூ உத்தியக் கையாளுவோம்.  இத பாகம் ஒண்ணுன்னு போட்டுட்டு...வாசகர் அனுபவத்தக் கேட்டு இன்புட் வாங்கிட்டு அப்புறமா தொடருவோம். ஒரே கல்லுல...மூணு நாலு மாங்கா. 1) ஆர்ட்டிக்கிள் லென்த் கொறஞ்சா மாதிரியும் ஆச்சு 2) லைவ்லியா இருக்குற மாதிரியும் ஆச்சு 3) ஃபாலோயர்ஸ் வர்றாங்களான்னு டெஸ்ட் பண்ணா மாதிரியும் ஆச்சு 4) நாமும் நேரத்துல தூங்கியாச்சு😆

........................................................................................தொடரும்.........................................

ஸ்னிப்பெட் (அடுத்த பகுதி முன்னோட்டம்) ----அக்காலக் காதல் vs இக்காலக் காதல், Pen vs keyboard, பேனாவின் வகைகளும் அதை வைத்து நாம் செய்த சேட்டைகளும்..

இதெல்லாம் படிக்க...உங்கள் அனுபவத்தைப் பகிருங்க, கமென்ட்டுங்க, ஃபாலோ பண்ணுங்க. 

வி.மஹாலிங்கம்

வடவள்ளி, கோவை 

 

 

6 comments:

  1. அந்த லெட்டர் (அது கெட்ட வார்த்தையாம் வளர்ப்பு அப்படி) நான் எழுதியதில்லைன்னு என்னைவிட உனக்கே நல்லா தெரியும். இப்ப சூரியநம்ஸ்காரம்
    செஞ்சு என்ன பிரயோசனம். ஆக இந்த அத்தியாயம் எனக்கானது இல்ல.. இருந்தாலும் மெஷினுக்குள்ள போட்டு அடைச்சிட்ட.. சில சம்பவங்கள் லாம் வந்து போகுது... யாராவது தைரியமா வந்து கமெண்ட்டுனா ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வரும்‌. வரும்.காத்திருப்போம்.

      Delete
  2. ஆங்... அந்த சாங் அத மறந்துட்டேன்... யூ டூ மஹா... ஸ்டில் அந்த சாங் எப்ப போட்டாலும் நெவர் மிஸ்ஸிங்.. அவ்ளோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. எஸ்....அவங்க சில விளம்பரங்களிலும் நடிச்சிருப்பாங்க.

      Delete
  3. ஹார்ட் ஷேப் ல பேப்பர் கட் பண்ணி பெயிண்ட் அங்க அங்க தூவி விட்டு கவிதைன்ற பேர்ல கிருக்கி விட்டத சொல்லாவா?
    ஆர்ச்சீஸ் போய் நம் மனதில் இருப்பதை பிரதிபலிக்கும் கார்ட் செலக்ட் செய்து எக்ஸ்ட்ராவா ஹார்ட் போட்டு அம்புட்டுத சொல்லவா?

    Thank you, Maha, for rekindling our memories. After ages, I came back from work and revisited our letters and cards

    ReplyDelete
    Replies
    1. மஹாராணி நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?

      Delete

திருப்பாச்சி

திருப்பாச்சி             வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் ...